பருப்புகளை கழுவி அரைமணி நேரம் ஊறவிடவும். பருப்பு ஊறும் நேரத்தில் வாழைப்பூவை சுத்தம் செய்துகொள்ளவும். முதல் நாளே சுத்தம் செய்து வைத்துகொள்ளலாம்.
சுத்தம் செய்த வாழைப்பூவை பொடியாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய வாழைப்பூவை தயிர் சிறிதளவு தண்ணீரில் சேர்த்து அதில் போட்டுவைக்கவும். பூவின் நிறம் கறுக்காமல் இருக்கும்.
ஊற வைத்த பருப்புகளை பச்சை மிளகாய், வர மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும். விருப்பப்ட்டால் 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து அரைத்துகொள்ளலாம்.
நறுக்கிய வாழைப்பூவை சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைக்கவும். மைக்ரோவேவ் அவனில் அல்லது ஆவியிலும் கூட வேகவைக்கலாம். விரைவாக வெந்துவிடும்.
அதே நேரத்தில் அரைத்த பருப்பு கலவையை ஆவியில் சிறிய உருண்டைகளாக்கி வேகவைக்கவும். இட்லி தட்டில் 15 நிமிடங்கள் வேகவிடவும்.
நன்றாக ஆறிய பின்னர் கைகளால் நன்றாக கட்டியில்லாமல் உதிர்த்துவிடவும். மிக்ஸியில் போட்டு ஒரு திருப்பியும் எடுக்கலாம்.
ஓரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு வெடிக்கவிட்டு கருவேப்பிலை சேர்க்கவும்.
உதிர்த்து வைத்த பருப்பு கலவையை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
வேகவைத்த வாழைப்பூவை சேர்த்து கிளறவும். உப்பு சரி பார்த்து அடுப்பை அனைக்கவும்.