Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
Print Recipe
பிரக்கோலி பரோட்டா
Course:
Main Course
Cuisine:
Indian
Author:
டாலியா டுவிங்கிள்
Ingredients
கோதுமை மாவு - 1.5 கிண்ணம்
மைதா மாவு – 1 மேசைக்கரண்டி
பிரக்கோலி – ½ பூ
(முழு பூவில் பாதியளவு)
வெங்காயம் – ½
(ஆரைத்தது – விருப்பபட்டால்)
பூண்டு - 1 பல்
பச்சை மிளகாய் - 2
கரம் மசாலா – 1 சிட்டிகை
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
ஓமம் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் – சுடுவதற்கு தேவையான அள்வு
Instructions
பிரகோலியை கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
சிறிது தண்ணீரை கொதிக்க வைத்து உப்பு சேர்த்து 10 துண்டுகளை சேர்க்கவும்.
2 நிமிடங்கள் கழித்து பிரக்கோலியை எடுத்து மஞ்சள் தூள், பூண்டு, கரம் மசாலா, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் மிருதுவாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, அரைத்த விழுது, உப்பு சேர்க்கவும்.
தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை சிறிது நேரம் மூடி வைக்கவும்.
சப்பாத்தி தேய்க்கும் அளவிற்கு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தி போல தேய்த்துக்கொள்ளவும்.
தோசை கல்லை சூடாக்கி பரோட்டாவை போடவும்.
பரோட்டாவின் மேல் எண்ணெய் அல்லது நெய் போடவும்.
இரண்டு பக்கமும் பிரவுன் கலர் மாறி வெந்தபின்னர் எடுக்கவும்.