பேக்கிங் பான் அல்லது குக்கரில் உள்ளே வைக்கும் அளவு உள்ள ஒரு பாத்திரத்தில் எண்ணெய் அல்லது வெண்ணெய் உள் பக்கம் முழுவதும் தடவவும். (நான்ஸ்டிக், அலுமினியம், அல்லது எவர்சில்வர் போன்று ஏதேனும் ஒரு பாத்திரம்.)
குக்கர் மூடியில் உள்ள கேஸ்கட் மற்றும் வெயிட்டை நீக்கி விடவும். குக்கரின் உள்ளே 1 கப் உப்பு (அல்லது மணல் அல்லது பேக்கிங் சோடா) போடவும். இது ஓவனில் செய்வது போலவும் குக்கரின் உள்பக்கம் கருப்பாக ஆகாமலும் தடுக்கலாம். குக்கருக்கு பதில் அடி கனமான வேறு பாத்திரத்தையும் உபயோகிக்கலாம்.
உப்பு போட்ட பின்னர் குக்கரை 5 நிமிடங்கள் சூடாக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
செய்முறை
ஒரு பெரிய கிண்ணத்தில் சர்க்கரை, எண்ணெய், பால் சேர்த்து கலக்கவும். சர்க்கரை கரையும் வரை கலக்கவும்.
மாம்பழக் சிரப் (அல்லது மாங்காய் கூழ்) சேர்த்து கலந்து கொள்ளவும்.
மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு அனைத்தையும் மாங்காய் கூழ், பால், சர்க்கரையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
முதலில் தயாராக எண்ணெய் தடவி வைத்த பாத்திரத்தில் அந்த கலவையை ஊற்றவும்.
ஏற்கனவே சூடு செய்த குக்கரில் மூடியை நீக்கி விட்டு வேறு ஒரு பாத்திரத்தை வைக்கவும்.
கலவையுடன் உள்ள பாத்திரத்தை ஏற்கனவே அடியில் வைத்த பாத்திரத்தின் மீது வைக்கவும். இதை செய்யும் போது கவனமாக செய்யவும் ஏனெனில் குக்கர் மிகவும் சூடாக இருக்கும்.
குக்கரை மூடி அடுப்பை மிதமான தீயில் 5 நிமிடங்கள் வைக்கவும்
அடுப்பை மீண்டும் குறைத்து 30 நிமிடங்கள் வைக்கவும். அதிகமான தீயில் இருந்தால் குக்கர் கருப்பாகிவிடும்.
டூத்பிக் கொண்டு நடுவில் குத்தி பார்க்கவும் மாவு எதுவும் ஒட்டாமல் வரும்வரை வேகவைக்கவும். குறைந்தது 30-45 நிமிடங்கள் ஆகும்.
அடுப்பை அணைத்து 5 நிமிட்ங்கள் ஆறவிடவும். பாத்திரத்தை வெளியில் எடுத்து மீண்டும் 10 நிமிடங்கள் ஆற வைத்து பின்னர் கேக்கை துண்டுகள் போடவும்.