சிக்கன் நெஞ்சு கறி / எலும்பு இல்லாத சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம்,குடமிளகாய் பெரியதாக நறுக்கியது - 1 கப்
உப்பு - 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் பொடி– 1 தேக்கரண்டி
வர மிளகாய் பொடித்தது -1/2 தேக்கரண்டி
இஞ்சி - பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தயிர் – 1 கப்
முந்திரி பருப்பு - 2 மேசைக்கரண்டி
எலுமிச்சம் பழம் - 1/2(சாறு)
கொத்தமல்லி இலை – 2 மேசைக்கரண்டி(பொடியாக நறுக்கியது)
சிகப்பு கலர் பவுடர் – சில துளிகள்(விருப்பப்பட்டால்)
எண்ணெய் -1 மேசைக்கரண்டி
Instructions
மசாலா பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். சிக்கன் மற்றும் காய்கறிகள் தவிர .
கலந்த மசாலாவை சிக்கன் மற்றும் காய்கறிகள்ளுடன் கலந்து கொள்ளவும்.
கலந்த கலவையை குளிர்சாதனப் பெட்டியில் 3 மணி நேரம் வைக்கவும். (அதிக நேரம் வைப்பதனால் சிக்கனில் மசாலா சேர்ந்து சுவையைக் கொடுக்கும்.)
மூங்கில் குச்சிகளை தண்ணீரில் ½ மணி நேரம் ஊற வைக்கவும்.
ஓவனை 350 டிகிரி ஃபாரன்கீட் (180 டிகிரி சென்டிகிரேட்) அளவுக்கு சூடுபடுத்தவும்.
பேக்கிங் பாத்திரத்தில் உள் பக்கம் எண்ணெய் தடவி மசாலா கலந்த சிக்கன்மற்றும் வெங்காயம், குடமிளகாய் அனைத்தையும் சேர்க்கவும்.
10 நிமிடங்கள் வேக வைத்து சிக்கன் துண்டுகளை திருப்பிவிட்டு மீண்டும் 10 நிமிடங்கள் வேகவிடவும். (சிக்கன் சமமாக வேக வைக்கவும்)
பேக்கிங் பாத்திரத்தை வெளியில் எடுத்து சிக்கன் மற்றும் காய்கறி துண்டுகளை எடுத்து, தந்தூரி குச்சிகளில் கோர்க்கவும்.
மூங்கில் குச்சிகளை மீண்டும் ஓவனில் 400 டிகிரி ஃபாரன்கீட்டில் (220 டிகிரி சென்டிகிரேட்) 10 நிமிடங்கள் வைக்கவும். (இது தந்தூரி அடுப்பில் செய்த சுவையைப் போன்ற சுவையில் இருக்கும்.