Go Back
Print
Recipe Image
Instruction Images
Smaller
Normal
Larger
Print Recipe
மூவர்ண இட்லி தோசை
Prep Time
15
minutes
mins
Cook Time
15
minutes
mins
Total Time
30
minutes
mins
Course:
Breakfast
Cuisine:
Indian
Servings:
4
Author:
டாலியா டுவிங்கிள்
Equipment
idli cooker
Ingredients
தேவையான பொருட்கள்
இட்லி மாவு – 3 கிண்ணம்
அல்லது தேவையான அளவு
ஆரஞ்சு வண்ணத்திற்கு
பெங்களூர் தக்காளி – 1 பெரியது
காஷ்மீரி சிகப்பு மிளகாய் – 2 அல்லது 3
பச்சை வண்ணத்திற்கு
கொத்தமல்லி தழை – 1 கிண்ணம்
பச்சை மிளகாய் – 1
Instructions
மூவர்ண இட்லி / தோசை மாவு
தேவையான அளவு மாவை எடுத்து மூன்று பாகமாக ஒரே அளவில் பிரித்து கொள்ளவும்.நான் மூன்று கிண்ணங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு கிண்ணம் மாவு எடுத்துள்ளேன்.
ஒரு கிண்ணத்தில் உள்ளதை வெள்ளை நிறத்திற்கு வைத்து கொள்ளவும்.
ஆரஞ்சு வண்ணத்திற்கு
தக்காளியை துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
தக்காளி , பச்சை மிளகாயை சில நிமிடங்கள் பச்சை வாசம் போகும் வரை வதக்கி கொள்ளவும்.
ஆற வைத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த விழுதை ஒரு கிண்ணம் மாவில் கலந்து கொள்ளவும். இது ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும்.
பச்சை வண்ணத்திற்கு
கொத்தமல்லி தழையை நறுக்கி கொள்ளவும் ( அல்லது புதினா இலைகள்)
கொத்தமல்லி தழை ,பச்சை மிளகாயை சில நிமிடங்கள் பச்சை வாசம் போகும் வரை வதக்கி கொள்ளவும்.
ஆற வைத்து மிருதுவாக அரைக்கவும்.
மூன்றாவது கிண்ணத்தில் உள்ள மாவில் கலக்கவும். இது பச்சை வண்ணத்தில் இருக்கும்.
மூவர்ண இட்லி தயாரிக்க
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தட்டில் எண்ணெய் தடவி கொள்ளவும்.
ஒவ்வொரு வண்ண மாவையும் தனித்தனியாக ஊற்றி வேக வைக்கவும்.
வெந்த பின்னர் கீழே உள்ளவாறு பரிமாறவும்.
மற்றொரு முறை ஒவ்வொரு வண்ண மாவையும் ஒரு ஒரு ஸ்பூன் ஊற்றி வேக வைத்தால் ஒரே இட்லியில் மூவர்ணம் கிடைக்கும்.
மூவர்ண தோசை தயாரிக்க
தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் தடவி கொள்ளவும்.
கால் கரண்டி மாவை எடுத்து கீழே உள்ளவாறு ஊற்றவும்.
அடுத்து ஒரு வண்ண மாவை ஊற்றி நடுவில் வருமாறு தேய்த்து விடவும். ,
அடுத்து மூன்றாவது வண்ண மாவை ஊற்றி தேய்த்து விடவும்.
மேலே சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.
ஒரு பக்கம் வெந்த பின்னர் திருப்பி விடவும். அடுத்த பக்கமும் வெந்தால் சுவையான மூவர்ண தோசை தயார்.