Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
Print Recipe
மீன் ஊறுகாய்
Course:
condiments
Cuisine:
Indian
Author:
டாலியா டுவிங்கிள்
Ingredients
மீன் – 1 கிலோ
(ஏதேனும் ஒரு வகை மீன் ஆனால் நெய் மீன் ஊறுகாய் செய்தால் சுவையாக இருக்கும்)
இஞ்சி – 1/4 கிண்ணம்
(பொடியாக நறுக்கியது அல்லது தட்டியது)
பூண்டு – 1/4 கிண்ணம்
(பொடியாக நறுக்கியது அல்லது தட்டியது)
பச்சை மிளகாய் – 10
(கீறியது - தேவைப்பட்டால்)
கருவேப்பிலை – 10 கொத்து
வர மிளகாய் தூள் – 4-5 மேசைக்கரண்டி
(தேவைப்பட்டால்)
மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
வினிகர் – 1/2 கிண்ணம்
கடுகு -1 தேக்கரண்டி
உப்பு – 5 தேக்கரண்டி
(அல்லது சுவைகேற்ப)
நல்லெண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
Instructions
மீனை நன்றாக சுத்தம் செய்து சதுர துண்டுகளாக வெட்டிகொள்ளவும். (முட்களை நீக்கிவிட்டு வெட்டவும்.)
பேப்பர் டவளில் போடவும். ஈரம் வடிய இதுபோல் செய்வது நல்லது.
மீன் துண்டுகளுடன் உப்பு, மஞ்சள் தூள், வர மிளகாய் தூள் சேர்த்து எல்லா துண்டுகள் மேலும் நன்றாக சேரும்படி கலந்து விடவும்.
குறைந்தது அரை மணிநேரம் ஊறவிடவும்.
குறைந்த தீயில் வைத்து பொன்னிறமாக பொரிக்கவும். கருகிவிடாமல் இருக்க வேண்டும்.
பொரித்த மீனை தனியாக எடுத்து வைக்கவும். அதே எண்ணெயை தாளிக்க பயன்படுத்தலாம். மீனின் மணம் அதிகமாக கிடைக்கும்.
வெந்தயம், கடுகு, சீரகம் மூன்றையும் பொடித்து எண்ணெயில் சேர்க்கவும்.
இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து கருகாமல் பொரிக்கவும்.
பச்சை வாசம் போனபின்னர் வினிகர் சேர்க்கவும். உங்களுக்கு கிரேவி அதிகமாக தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
அடுப்பை அணைத்து மீன் துண்டுகள் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
இந்த ஊறுகாய் இரண்டு நாட்கள் அப்படியே வைக்கவும். நன்றாக ஊறி சுவை கிடைக்கும்.