½ கிண்ணம் கோதுமை ரவைக்கு 1 கிண்ணம் தண்ணீர் வைத்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் சிறிது உப்பு சேர்க்கவும். அடுப்பை குறைத்து கோதுமை ரவை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
சில நிமிடங்கள் வைத்து அடுப்பை அணைத்து 5 நிமிடங்கள் மூடிவைக்கவும். கோதுமை ரவை இதில் வெந்துவிடும். இதற்கு பதிலாக மீதமான கோதுமை ரவை உப்புமாவையும் பயன்படுத்தலாம்.
இந்த நேரத்தில் காய்கறிகளை துருவி அல்லது பொடியாக நறுக்கிகொள்ளவும். நறுக்கிய காய்கறிகளை ஒரு கிண்ணத்தில் எடுத்துகொள்ளவும். மைக்ரோவேவ் அவனில் பாதியாக வேகவைத்துகொள்ளலாம். ஆனால் நான் அப்படியே எடுத்துள்ளேன்.
இதனுடன் வேகவைத்த கோதுமை ரவை, துருவிய பன்னீர், சோயா சாஸ், சில்லி சாஸ் அனைத்தையும் கலந்துகொள்ளவும்.
தண்ணீர் சற்று அதிகமாக இருந்தால் பிரட் தூள் அல்லது கோதுமை மாவு சேர்த்துகொள்ளவும்.
ருசி சரி பார்த்து கொள்ளவும். சிறிதளவு மாவை எடுத்து கட்லட் வடிவத்திற்கு செய்துகொள்ளவும்.
அடுப்பில் ஒரு தாவாவைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கட்லட்டை வைத்து இருபுறமும் நன்றாக சிவக்கவிட்டு எடுக்கவும்.