வாழைத்தண்டின் மேல் உள்ள நீக்கிவிடவும். எளிதாக எடுக்கமுடியும் வரை தோலை எடுக்கவும்.
கூரான கத்தியால் வட்டமாக மெல்லிய துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.ஒவ்வொரு துண்டுக்கும் இடையில் நார் இருந்தால் விரலால் நீக்கவும். சாறு எடுக்க வேண்டுமானால் நறுக்கிய துண்டுகளை உபயோகித்துகொள்ளலாம். வேறு வகைகளான பொரியல் செய்வதற்கு மேலும் சிறிய துண்டுகளாக நறுக்கவேண்டும்.
வட்டமாக நறுக்கிய துண்டுகள் 5 எடுத்து ஒன்றன் மேல் ஒன்று வைத்து நீளவாக்கில் நறுக்கவும். மீண்டும் அதை அடுக்கி பொடியாக நறுக்கிகொள்ளவும்.
நறுக்கிய வாழைத்தண்டை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தயிர் சேர்க்கவும். நான் 2 மேசைக்கரண்டி தயிரை தண்ணீருடன் கலந்துகொள்வேன். இது வாழைத்தண்டு நிறம் மாறுவதை தடுக்கும். நான் இனிப்பு செய்ய உபயோகிப்பதாக இருந்தால் வெறும் தண்ணீரில் ஊறவைப்பேன்.
இப்போது மீதமுள்ள நாரை எடுக்க தண்டில் ஒரு ஸ்பூன் அல்லது மூங்கில் குச்சியால் எடுக்கலாம். கையை வட்டமாக தண்டு உள்ள பாத்திரத்தில் சுற்றினால் அதில் உள்ள நார் குச்சியில் சுற்றிகொள்ளும். குச்சியில் உள்ளதை நீங்கள் உங்கள் விரலால் எடுத்துவிடலாம்.
இரண்டு அல்லது மூன்றுமுறை செய்து குச்சியில் உள்ள நாரை நீக்கிவிடவும். இந்த முறையில் தான் எனது பாட்டி நாரை நீக்குவார்கள்.
சுத்தம் செய்து நார் நீக்கப்பட்ட வாழைத்தண்டு சமைக்க தயார்.